தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாகி த.வெ.க 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், கட்சித் தலைவர் விஜய் தனது புதிய எம்.எல்.ஏ-க்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். வெற்றி பெற்ற அனைத்து எம்.எல்.ஏ-க்களும் தங்களது வெற்றிச் சான்றிதழுடன் இன்று மதியத்திற்குள் சென்னைக்கு வர வேண்டும் என அவர் கட்டளையிட்டுள்ளார். ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்டுவதற்குச் சில இடங்கள் குறைவாக இருப்பதால், மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து தீவிர ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

​இந்தச் சூழலில், குதிரை பேரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் மாமல்லபுரத்தில் உள்ள ‘Four Points by Sheraton’ ரிசார்ட்டில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு வரும் அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் விஜய் நேரில் சந்தித்துப் பேச உள்ளார். இந்தச் சந்திப்பின் போது ஆட்சி அமைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் கூட்டணி குறித்து மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.