சமூக ஊடகங்களில் பகிரப்படும் விசித்திரமான மற்றும் வேடிக்கையான காணொளிகள் எப்போதும் மக்களின் கவனத்தை ஈர்க்கத் தவறுவதில்லை. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளியில், ஒரு இளைஞன் நீச்சல் குளத்தின் அருகே தனது ஸ்கூட்டருடன் வந்து வினோதமான சாகசம் செய்ய முயற்சிப்பதைக் காணலாம்.

ஸ்கூட்டரின் பின் சக்கரத்தைத் தண்ணீருக்கு அருகில் கொண்டு சென்று, அதை வேகமாகச் சுழற்றி ஒரு நீரூற்று போன்ற தோற்றத்தை உருவாக்க அவன் திட்டமிட்டிருந்தான். ஆனால், எதிர்பாராத விதமாகச் சமநிலையை இழந்த அந்த இளைஞன் நிலைதடுமாறி ஸ்கூட்டருடன் தண்ணீருக்குள் விழும் நிலை ஏற்பட்டது.

தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அந்த இளைஞன் உடனடியாகத் தண்ணீரில் குதிக்க, அவனது ஸ்கூட்டரும் பின்னோக்கிச் சென்று குளத்திற்குள் மூழ்கியது. இதைக் கண்டு ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மற்ற நண்பர்கள், பிறகு சுதாரித்துக் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து ஸ்கூட்டரைத் தண்ணீரிலிருந்து வெளியே இழுத்தனர்.

“>

 

எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்தக் காணொளி, பார்ப்பதற்குச் சிரிப்பை வரவழைத்தாலும், இது போன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபடும்போது எச்சரிக்கை எவ்வளவு அவசியம் என்பதை நமக்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.