தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கள் “களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் விஜய் சாருக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்து வருவது அரசியல் களத்தை இன்னும் சூடாக்கியுள்ளது.

அமைச்சர்களின் இந்தத் தொடர் தோல்வி திமுகவிற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டாலும், ராணிப்பேட்டை தொகுதி மக்கள் ஒரு புதிய மாற்றத்திற்குப் பச்சைக் கொடி காட்டி தவெக-வை வெற்றி பெறச் செய்துள்ளனர்.

ஒரு நீண்டகால அரசியல் அனுபவம் வாய்ந்த தலைவரையே புதிய வேட்பாளர் வீழ்த்தியிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ராணிப்பேட்டை பக்கம் திருப்பியுள்ளது.