தமிழகத்தில் 73 வருட வரலாற்றில் தமிழக வெற்றிக்கழகம் கட்சி தொடங்கிய இரண்டே வருடங்களில் மெகா சாதனை படைத்து கிட்டத்தட்ட ஆட்சி அமைக்க இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் அந்த கட்சியினர் வெற்றி வாகை சூடி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வேலூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் வினோத் கண்ணன் வெற்றி பெற்றுள்ளார். இதே போன்று மாதவரம் தொகுதியில் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்த கட்சியின் வேட்பாளர் விஜய் பிரபு வெற்றி பெற்றுள்ளார்.

திருவாடனை தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் வி கே ராஜுவ் வெற்றி பெற்றுள்ளார். விருகம்பாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜையிடம் நீண்ட நாட்களாக கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தவரின் மகன் சபரிநாதன் களமிறக்கிய நிலையில் அவரும் வெற்றிவாகை சூடினார். மேலும் மதுரை மேரிக்கல் தமிழக வெற்றிக்கழகத்தின் வேட்பாளர் தங்கபாண்டியன் வெற்றி வாகை சூடி உள்ளார்.