தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கையில், நாமக்கல் மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதியான திருச்செங்கோட்டில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தவெக-வின் மாநில கொள்கை பரப்புப் பொதுச்செயலாளரான கே.ஜி. அருண்ராஜ், ஆரம்பம் முதலே தனது அசுர வேக முன்னிலையைத் தக்கவைத்துக் கொண்டு வெற்றி வாகை சூடியுள்ளார்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக கூட்டணி (கொமதேக) வேட்பாளரும், சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான ஈ.ஆர். ஈஸ்வரன் மற்றும் அதிமுக வேட்பாளர் ஆர். சந்திரசேகர் ஆகியோரை விடக் கூடுதல் வாக்குகள் பெற்று அருண்ராஜ் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார். கொங்கு மண்டலத்தில் தவெக பெற்றுள்ள இந்த முதல் வெற்றி, அக்கட்சியின் எதிர்கால அரசியலுக்கு ஒரு மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது. அருண்ராஜின் வெற்றியைத் தொடர்ந்து திருச்செங்கோடு நகர் முழுவதும் தவெக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது வரலாற்று வெற்றியைத் தங்களது தலைவருக்குச் சமர்ப்பித்து வருகின்றனர்.
