நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. கேரளத்தில் கடந்த இரண்டு முறையாகத் தொடர்ந்து ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி முன்னணியைத் தோற்கடித்து, காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் கூட்டணி 100 தொகுதிகளில் வெற்றி  பெற்று ஆட்சியை உறுதி செய்துள்ளது. சிபிஎம் (இடதுசாரி முன்னணி): 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. பாஜக 3 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதேபோன்று மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான 15 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை அகற்றிவிட்டு, பாரதிய ஜனதா கட்சி முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் பாஜக 197 இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் புதிய வரலாறு படைத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டிலும் புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் ஆட்சி அமைக்க இருக்கிறார் இதன் காரணமாக தற்போது அனைத்து மாநிலங்களிலும் மக்கள் மாற்றத்தை தேர்ந்தெடுத்து விட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.