தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ‘தமிழக வெற்றி கழகம்’ (தவெக) அடுத்தடுத்து தனது வெற்றிகளைப் பதிவு செய்து வருகிறது. தஞ்சாவூர் உள்ளிட்ட முக்கியத் தொகுதிகளைத் தொடர்ந்து, தற்போது சென்னைக்கு மிக அருகிலுள்ள தாம்பரம் தொகுதியிலும் தவெக தனது வெற்றிக் கொடியை நாட்டியுள்ளது. இத்தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சரத்குமார், திமுக மற்றும் அதிமுக போன்ற பலமிக்க கட்சிகளின் வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி அபார வெற்றி பெற்றுள்ளார்.

​இறுதிக்கட்ட சுற்றுகளின் முடிவில் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை உறுதி செய்துள்ளார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் தவெக-விற்கு கிடைத்துள்ள 3-வது அதிகாரப்பூர்வ வெற்றியாக இது கருதப்படுகிறது. சாதாரண வேட்பாளராகக் களம் இறங்கி, பெரிய கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்த சரத்குமாரின் இந்த வெற்றி, தாம்பரம் பகுதியில் தவெக-விற்கு இருந்த செல்வாக்கையும், தலைவர் விஜய்யின் பிரச்சாரத்திற்கு கிடைத்த வரவேற்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.