தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 98 முதல் 120 இடங்கள் கிடைக்கும் எனப் புரட்சிகரமான கணிப்பை வெளியிட்ட ‘ஆக்சிஸ் மை இந்தியா’ (Axis My India) நிறுவனத்தின் தலைவர் பிரதீப் குப்தா, இன்று வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் தனது கணிப்பை மெய்ப்பித்து வருவதால் செம்ம குஷியில் நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆரம்பத்தில் மற்ற ஊடகங்கள் தவெக-விற்கு 25 இடங்கள் கூடக் கிடைக்காது எனச் சொன்னபோது, தனித்து நின்று ‘விஜய் அலை’ வீசுவதைத் துணிச்சலாகக் கணித்தவர் இவர். இன்று 2026 தேர்தல் முடிவுகளில் தவெக 110 இடங்களைத் தாண்டி அசுர வேகத்தில் முன்னிலை பெற்று வருவதால், தனது எக்ஸ் (Twitter) தளத்தில் உற்சாகமாக நடனமாடும் வீடியோவைப் பகிர்ந்துள்ள பிரதீப் குப்தா, “நாங்க சொன்னது பலிச்சிருச்சு!” என மார்தட்டி வருகிறார்.

“>

 

இந்தக் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, அவரது துல்லியமான கணிப்பைக் கண்டு அரசியல் விமர்சகர்களே ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.