ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் ஓடிக்கொண்டிருந்த பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த பெண்ணை, பைக்கை ஓட்டிச் சென்ற நபர் கொடூரமாகத் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நபர் பைக்கை ஓட்டிச் செல்லும்போதே திடீரென பின்னால் திரும்பி அந்தப் பெண்ணின் முடியைப் பிடித்து இழுப்பதும், சரமாரியாகத் தாக்கும் காட்சிகளும் ஒரு வழிப்போக்கரின் மொபைல் கேமராவில் சிக்கியுள்ளது.

அந்தப் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ளப் போராடியும், அந்த நபரின் வெறிச்செயல் நிற்கவில்லை. சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தபோதும், யாரும் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முன்வரவில்லை என்பது பெரும் வேதனையையும், சமூகப் பாதுகாப்புக் குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.

“>

 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபரைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான இது போன்ற வன்முறைகள் பொது இடங்களிலேயே நடப்பது அங்குள்ள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.