லக்னோவில் உள்ள சுஷாந்த் கோல்ஃப் சிட்டி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில், கணவன் வேறொரு பெண்ணுடன் இருந்ததை மனைவி கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போபாலைச் சேர்ந்த ஆகாஷ் கன்னோஜியா என்பவர், தனது நான்கு மாத கைக்குழந்தை மற்றும் மனைவியை விட்டுவிட்டு, மறைமுகமாக இந்த ஹோட்டலில் தங்கியுள்ளார்.
இதனை மோப்பம் பிடித்த அவரது மனைவி, நேராக ஹோட்டலுக்குச் சென்று கணவனைப் பிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், அந்தப் பெண் தனது கணவரையும் அவருடன் இருந்த பெண்ணையும் கடுமையாகச் சத்தமிடுவதையும், யாரும் வெளியே போகக்கூடாது என்று மிரட்டுவதையும் காண முடிகிறது. மேலும், தனது சகோதரரிடம் இது குறித்துப் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்குமாறு அவர் ஆவேசமாகக் கூறுகிறார்.
सुशांत गोल्फ सिटी थाना क्षेत्र में होटल मेपल ट्री ओमेक्स मिनी में रंगरलियां मनाते हुए पत्नी ने पति को पकड़ा.4 महीने के बेटी और पत्नी को छोड़ रंगरलियां मनाने होटल में गया था पति.पति का नाम आकाश कनौजिया बताया जा रहा है जो की भोपाल का रहने वाला है।@lkopolice @LkoCp pic.twitter.com/CmnH8yYhZr
— Ajitesh Kumar (@ajju_journalist) May 3, 2026
“>
ஹோட்டல் வளாகத்தையே போர்க்களமாக மாற்றிய இந்த ‘ஹை வோல்டேஜ்’ நாடகம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் நெட்டிசன்களிடையே விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.
