லக்னோவைச் சேர்ந்த வாடகைக் கார் ஓட்டுநர் உபேந்திர குப்தாவின் மகள்கள், வறுமையையும் கடினமான சூழலையும் கடந்து சாதித்துக் காட்டியுள்ள கதை அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. விலையுயர்ந்த பயிற்சி மையங்களுக்குச் செல்லாமல், வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளேயே சுயமாகப் படித்து உபேந்திராவின் மகள்கள் இன்று நாட்டின் உயர்பதவிகளை அடைந்துள்ளனர்.

ஒரு மகள் ஏற்கனவே ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கும் நிலையில், தற்போது இரண்டாவது மகள் சிபிஐ அதிகாரியாகத் தேர்வாகி குடும்பத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். தன் மகள்களின் கல்விக்காக இரவும் பகலும் கார் ஓட்டி உழைத்த உபேந்திராவின் தியாகத்திற்கு இன்று மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
<a href=”http://

 

View this post on Instagram

 

A post shared by Times Now (@timesnow)

“>

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், உபேந்திரா தனது மகிழ்ச்சியை அடக்க முடியாமல் கண்ணீருடன் பேசுகிறார். “நாங்கள் இப்போது ஒரு சிபிஐ அதிகாரியின் தந்தை ஆகிவிட்டோம், இதைவிட ஒரு பெற்றோருக்கு வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும்?” என்று அவர் உருக்கமாகக் கேட்கும் வார்த்தைகள் காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றன.

பொருளாதார நெருக்கடியால் தன்னால் படிக்க முடியாமல் போனாலும், தன் மகள்களின் கனவுகளை வறுமை தடுத்துவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இன்று அந்த மகள்கள் அதிகாரிகளாக உயர்ந்து நிற்பது, கடின உழைப்பிற்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது