‘போர் தொழில்’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் கடந்த 30-ஆம் தேதி வெளியான ‘கர’ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 1990-களில் ராமநாதபுரத்தில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து, கிராமத்து பின்னணியில் ஆக்ஷன் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜெயராம், கருணாஸ், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, இப்படத்தில் முதியவர் வேடத்தில் நடித்த நடிகர் எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், நல்ல கதைக்காக எந்தவொரு மாற்றத்தையும் செய்யத் தயார் என்றும், ரசிகர்கள் தன்னை அடையாளப் படுத்துவதை விட அந்த கதாபாத்திரத்தை ரசிப்பதே தனக்கு பெருமை என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தனது குரலையும் தோற்றத்தையும் முழுமையாக மாற்றி அவர் காட்டியுள்ள அர்ப்பணிப்புக்கு சினிமா ரசிகர்களிடம் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
