ராகுல் காந்தியின் பேச்சைத் தவறாக மொழிபெயர்த்தது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உருக்கமாகப் பதிலளித்துள்ளார்.

“நான் அரசுப் பள்ளியில் படித்து வளர்ந்தவன், எனக்குத் தெரிந்த ஆங்கில அறிவை வைத்து என்னால் முடிந்தவரைச் சிறப்பாக மொழிபெயர்த்தேன்; ஆனால் என்னைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, இப்படி விமர்சனம் செய்கிறீர்களே” என்று அவர் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

“>

 

ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்து மேடையில் மொழிபெயர்க்கும் முயற்சியை எடுத்ததைப் பாராட்டாமல், குறைகளை மட்டுமே பெரிதுபடுத்துவது நியாயமில்லை என்ற ரீதியில் அவர் தனது விளக்கத்தை முன்வைத்துள்ளார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதமாக மாறியுள்ளது.