டெல்லியில் வாட்டி வதைக்கும் கடுமையான வெயிலால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கிக் கிடந்த பருந்து ஒன்றை, நிக் புக்கர் என்ற பிரிட்டிஷ் நபர் மீட்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

41 டிகிரி வெயிலில் பறக்க முடியாமல் தவித்த அந்த ‘பிளாக் கைட்’  வகை பருந்தை மீட்டு, குளிர்ந்த நிழலில் வைத்து அவர் தண்ணீர் கொடுத்தார். அந்தப் பறவை தாகத்துடன் தண்ணீரை அருந்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

பின்னர், ‘வைல்ட் லைஃப் எஸ்ஓஎஸ்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்குத் தகவல் கொடுத்து, அந்தப் பறவையைச் சிகிச்சைக்காக அவர் ஒப்படைத்தார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த லட்சக்கணக்கான மக்கள் நிக் புக்கரின் செயலைப் பாராட்டி வருகின்றனர்.

“நமக்கு வெயில் அதிகம் என்றால், வாயில்லா ஜீவன்களுக்கும் அது கஷ்டம்தான்” என்று அவர் குறிப்பிட்டுள்ள கருத்தை பலரும் வழிமொழிந்துள்ளனர். பறவைகள் மற்றும் விலங்குகளின் தாகத்தைத் தீர்க்க அனைவரும் தங்கள் வீடுகளுக்கு வெளியே தண்ணீர் வைக்க வேண்டும் என்று அவர் விடுத்த வேண்டுகோளுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by IndoGenius | Nick Booker (@indogenius)

“>

டெல்லியின் கடுமையான வெப்ப அலைக்கு இடையே இந்த மனிதாபிமானச் செயல் பலரது இதயங்களை வென்றுள்ளது.