புளோரிடாவில் நடந்த பேரணியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான கடல்சார் தடையின் போது அமெரிக்க கடற்படை “கடற்கொள்ளையர்களைப் போல” செயல்படுவதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஈரானிய துறைமுகங்களை முடக்கி, அங்கிருந்து வரும் கப்பல்களைக் கைப்பற்றி, அதில் உள்ள எண்ணெய் மற்றும் சரக்குகளை அமெரிக்கா எடுத்துக் கொள்வது லாபகரமான வணிகமாக இருப்பதாக அவர் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை “கடல் வழி ஆயுதப்பறிப்பு” என்று ஈரான் கடுமையாகச் சாடியுள்ளது. சர்வதேச சட்டங்களை மீறி அமெரிக்கா கடற்கொள்ளையர்களைப் போலச் செயல்படுவதை சட்டப்பூர்வமாக்கப் பார்ப்பதாக ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

தற்போது நிலவி வரும் போர் சூழலால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் தனது கப்பல்களைத் தவிர மற்ற அனைத்து கப்பல்களையும் ஈரான் தடுத்து வருகிறது. இதற்குப் பதிலடியாக ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது.

இதுவரை 45-க்கும் மேற்பட்ட கப்பல்களைத் திசை திருப்பி அமெரிக்க ராணுவம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. “இந்தத் தடை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நீடிக்கும்” என்று அமெரிக்க ராணுவத் தரப்பு தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்கா தனது முற்றுகையை விலக்கும் வரை ஹார்முஸ் ஜலசந்தியைத் தனது பிடியில் வைத்திருப்போம் என்று ஈரானும் சூளுரைத்துள்ளது.

This is the outright legalization of piracy and armed robbery on the high seas.
Welcome to the return of the pirates — only now, they operate with government-issued warrants, sail under official flags, and call their plunder “law enforcement.”
The United States must be held fully… pic.twitter.com/5xACMKs45M

“>

 

இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.