சமூக வலைதளங்களில் எப்போது என்ன வைரலாகும் என்றே சொல்ல முடியாது. அந்த வகையில், தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது ஒரு வித்தியாசமான வீடியோ.

சுமார் 12 லட்சம் பாலோவர்களைக் கொண்ட பிரபல நகைச்சுவை கலைஞர் ராஜு குமார், நாய் ஒன்றுடன் அமர்ந்து அதன் பாணியிலேயே தனது மனக் கவலைகளைப் பகிர்ந்துகொள்ளும் காட்சி வைரலாகி வருகிறது.

வீடியோவில் நாயின் முன்னங்கலைப் பிடித்துக்கொண்டு ராஜு குமார் மிகவும் உருக்கமாக நாயின் குரலில் ஏதோ சொல்ல, அந்த நாயும் அவரை உற்று கவனித்து அதே மொழியில் பதில் அளிக்கிறது.

இவர்களது இந்த ‘உரையாடல்’ மிகத் தத்ரூபமாக இருப்பதால், அந்த நாய் ராஜுவின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு உண்மையிலேயே ஆறுதல் சொல்வது போலவே இருக்கிறது.

இந்த வீடியோவை இதுவரை 45 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ள நிலையில், 1.8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

கமெண்ட் செக்ஷனில் நெட்டிசன்கள் பலரும் தங்களது சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “முதலிலிருந்து கடைசி வரை அவர்கள் என்ன பேசினார்கள் என்று புரியவில்லை, ஆனால் இருவரின் ரியாக்ஷன்களும் என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது” என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர், “இது கண்டிப்பாக ஒரு பெக் போட்ட பிறகு வரும் ஆழமான நட்பு” என கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். விலங்குகளின் குரலை அப்படியே பிரதிபலிக்கும் ராஜு குமாரின் இந்தத் திறமை தற்போது இணையத்தில் ‘கதர்’ கிளப்பி வருகிறது.