ஜிஎஸ்டி (GST) வரி விதிப்பில் பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் வரிக் குறைப்புகள் செய்யப்பட்ட பிறகும், உணவுப் பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) தனது சமீபத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, கார்களின் விலை 7.5% வரையிலும், ஏசிகளின் விலை 5.9% வரையிலும் குறைந்துள்ள நிலையில், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி கணிசமாகக் குறைக்கப்பட்டும் அதன் பயன் இறுதி நுகர்வோரான மக்களுக்குச் சென்றடையவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆடம்பரப் பொருட்களின் விலை சரிந்த அளவுக்கு, அடிப்படைத் தேவைகளின் விலை குறையாதது பொருளாதார ரீதியாகப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
