கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் வெப்பத்தின் தாக்கத்தால் தவித்து வருகின்றன. இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஒரு வீட்டின் மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டியைச் சுற்றி சில குரங்குகள் கூட்டமாக கூடி நிற்கின்றன. வெயிலின் உஷ்ணத்தைத் தாங்க முடியாமல், அந்த வாட்டர் டேங்க்கையே ஒரு ஸ்விம்மிங் பூலாக மாற்றி குரங்குகள் ஜாலியாக குளித்து மகிழ்கின்றன.

சில குரங்குகள் தொட்டிக்குள்ளே இறங்கி குளிர்ந்த நீரில் குத்தவைத்து அமர்ந்திருக்க, மற்ற சில குரங்குகள் வெளியே அமர்ந்து காவல் காப்பது போல வேடிக்கை பார்க்கின்றன.

சுட்டெரிக்கும் வெயிலில் தங்களை தற்காத்துக் கொள்ள இந்த விலங்குகள் கையாளும் வித்தையை பார்த்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

‘வெயில் இவங்களையும் விட்டு வைக்கலையே’ எனப் பரிதாபப்பட்டாலும், குரங்குகளின் இந்தத் துறுதுறுப்பான செயல் பலரது முகத்திலும் சிரிப்பை வரவழைத்துள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.