சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலானாலும், சில வீடியோக்கள் நம்மை அப்படியே உறைய வைத்துவிடும். அந்த வகையில், தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, நொறுக்குத் தீனி பிரியர்களைப் பெருத்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாகவே கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்கள் எவ்வளவு சுத்தமாகத் தயாரிக்கப்படுகின்றன என்ற கேள்வி நமக்குள்ளே இருக்கும். அதற்கு விடையளிப்பது போல அமைந்துள்ள இந்த வீடியோவில், ஒரு பெரிய அறையில் மலை போலக் குவிந்து கிடக்கும் ‘சேவ் புஜியா’ (Sev Bhujia) தின்பண்டத்தை இரண்டு நபர்கள் அப்புறப்படுத்துகிறார்கள்.
इतने गंदे तरीके से बन रहा है सेव भुजिया, अब आज के बाद कभी नहीं खाऊंगा। pic.twitter.com/VaQyXX65so
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) April 29, 2026
பார்ப்பதற்கே அருவருப்பாக, அந்த நபர்கள் செருப்பு கூட அணியாமல் வெறும் காலால் அந்த உணவுப் பண்டத்தின் மீது ஏறி நின்று கொண்டு, மண் அள்ளும் கருவியால் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
எவ்வித சுகாதாரமும் இன்றித் தயாரிக்கப்படும் இந்த உணவுதான் அழகிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு சந்தைக்கு வருகிறது என்பதை நினைக்கும்போது நெட்டிசன்கள் பலரும் கொந்தளித்துப் போயுள்ளனர்.
‘இனிமேல் வாழ்நாளில் சேவ் புஜியா பக்கமே போகமாட்டேன்’ எனப் பலரும் கமெண்ட் செய்து வரும் இந்த வீடியோ, எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை என்றாலும், வெளியில் விற்கும் தின்பண்டங்களை வாங்கும் முன் நூறு முறை யோசிக்க வேண்டும் என்பதை எச்சரிக்கையாக உணர்த்துகிறது.
