அதிமுகவினர் தவெக-வில் தொடர்ந்து இணைவது குறித்து எழும் விமர்சனங்களுக்குத் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மிக ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுத்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா இருந்தபோது அதிமுகவினர் யாரும் கட்சியை விட்டு வெளியே போகவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், எடப்பாடி பழனிசாமி சதி மற்றும் சூழ்ச்சி செய்துதான் பதவியைப் பிடித்தார் என்று நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

உங்கள் தலைமை மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்திருந்தால் ஏன் உங்களை விட்டுவிட்டு எங்களை நோக்கி ஓடி வரப்போகிறார்கள் என்றும், முதலில் உங்கள் மீதுள்ள தவறை யோசித்துப் பாருங்கள் என்றும் அதிமுக தலைமைக்கு நறுக் கேள்வி எழுப்பியுள்ளார். ​தவெக-வில் நடக்கும் இணைப்புகள் எதிலும் எந்தவிதமான குதிரை பேரமும் கிடையாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள ஆதவ் அர்ஜுனா, தங்களது பிரகாசமான அரசியல் எதிர்காலத்தை நம்பித்தான் மக்கள் மற்றும் பிற கட்சியினர் தவெக-வை விரும்பி ஓடி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

அதிமுகவிலிருந்து விலகி வருபவர்களுக்கான அசல் காரணத்தை உடைத்துப் பேசியுள்ள ஆதவ் அர்ஜுனாவின் இந்த ஓபன் டாக், தற்போது அதிமுக வட்டாரத்திலும் தமிழக அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது