தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சந்தி சிரிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையான புகாரை முன்வைத்துள்ளார். தவெக ஆட்சியில் நாள்தோறும் வெளியாகும் கொடூரமான குற்றச் சம்பவங்கள் குறித்த செய்திகள் பொதுமக்களிடையே பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆட்சியில் தினமும் கொடூரமான குற்றங்கள் மட்டும்தான் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன என்றும், இதனால் மக்களின் பாதுகாப்பு என்பது முற்றிலும் கேள்விக்குறியாகிவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் தற்போதைய அரசு முற்றிலும் திணறி வருவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சட்டம் ஒழுங்கு டோட்டல் டேமேஜ் ஆகிவிட்டதைச் சுட்டிக்காட்டி விஜய் அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ள இந்த அதிரடி அட்டாக், தற்போதைய தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
