சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, கட்சியை விட்டு விலகிச் செல்பவர்களைப் பற்றி மிகக் காரசாரமாகப் பேசியுள்ளார். அதிமுக மூலம் எல்லாப் பலன்களையும் அனுபவித்துவிட்டு, இப்போது தங்களது சுயநலத்திற்காகப் புதிய பலனைத் தேடித்தான் சிலர் வேறு கட்சிகளுக்கு ஓடுகிறார்கள் என்று அவர் சாடியுள்ளார். அப்படிப்பட்டவர்கள் போனாலும், உண்மையான கொள்கைவாதிகள் எப்போதுமே அதிமுகவில்தான் இருக்கிறார்கள் என்று அவர் மிகக் கெத்தாகத் தெரிவித்துள்ளார்.

​மேலும், கட்சியின் தற்போதைய சூழ்நிலை குறித்து மாவட்ட வாரியாக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்துக்களைப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்து வருவதாகக் குறிப்பிட்டார். கட்சியினரின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் எடப்பாடியார் வழங்கி வருவதாகக் கூறிய கே.பி.முனுசாமி, சுயநலவாதிகள் விலகுவதால் அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், கொள்கை பலத்தோடு கட்சி என்றும் கம்பீரமாக இருக்கும் என்றும் உறுதியாகப் பேசியுள்ளார்.