சமூக வலைதளங்களில் எப்போதுமே சுவாரஸ்யமான வீடியோக்களுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், சில நேரங்களில் நாம் பார்க்கும் வீடியோக்கள் நம் ரத்தத்தையே உறைய வைத்துவிடும். அப்படி ஒரு வீடியோ தான் இப்போது இணையத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.
சமையலறையில் ஒரு பெண் வேலை செய்து கொண்டிருக்க, அருகில் அமர்ந்திருக்கும் ஒரு சிறுவன் மெழுகுவர்த்திக்கு மிக அருகில் விளையாடிக் கொண்டிருக்கிறார். யாருமே எதிர்பார்க்காத ஒரு நொடியில், அந்த மெழுகுவர்த்தியின் சுடர் சிறுவனின் தலைமுடியில் படுகிறது.
مشهد عادي تحول لحادثة شمعة تلامس شعر طفل بدون ما ينتبه أحد 😳
وش اللي صار بعدها؟ pic.twitter.com/6F9SM7FJYl— تالا (@t__ala1) April 28, 2026
கண்களை இமைக்கும் நேரத்தில் முடி தீப்பற்றி எரியத் தொடங்குகிறது. ஆனால், வேதனையான விஷயம் என்னவென்றால் அந்தச் சிறுவனுக்கோ அல்லது அருகில் இருக்கும் பெண்ணிற்கோ இது தொடக்கத்தில் தெரியவே இல்லை. சிறிது நேரம் கழித்தே அந்தப் பெண் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்து தீயை அணைக்கிறார்.
அதிர்ஷ்டவசமாகப் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டாலும், இந்த வீடியோ பெற்றோர்களுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
