ஐபிஎல் 2026 போட்டிக்காகத் தனது சொந்த ஊரான டெல்லிக்குத் திரும்பியுள்ள விராட் கோலி, இன்று ‘டிபிஎஸ்’ பள்ளியில் தனது சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மாவுடன் இணைந்து புதிய கிரிக்கெட் அகாடமி ஒன்றைத் தொடங்கி வைத்தார். விழாவில் மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி ஊக்க உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது.
Kohli 😭😭 pic.twitter.com/OGjZypUrqh
— Vivek (@Hailkohli18) April 28, 2026
விருது பெற வந்த ஒரு சிறுவன், திடீரென விராட் கோலியின் காலைத் தொட்டு வணங்க முயன்றார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத 37 வயதான விராட் கோலி, அதிர்ச்சியடைந்து உடனடியாக அந்தச் சிறுவனைத் தடுத்து நிறுத்தினார். பின்னர், அந்தச் சிறுவனுக்குப் பதில் மரியாதை செய்யும் விதமாகத் தானும் கைகூப்பி வணக்கம் தெரிவித்தார்.
ஜாம்பவான் அந்தஸ்தில் இருந்தாலும், ஒரு மாணவனிடம் அவர் காட்டிய இந்த மிக உயர்ந்த பண்பு அங்கிருந்தவர்களையும், சமூக வலைதளவாசிகளையும் நெகிழ வைத்துள்ளது. “இவர்தான் நிஜமான ‘கிங்’.. எவ்வளவு உயரம் சென்றாலும் அவரது எளிமை குறையவில்லை” என ரசிகர்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து கோலியைப் புகழ்ந்து வருகின்றனர்.
