தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்துக் கணிப்பது தற்போதைய சூழலில் மிகவும் சவாலான ஒன்றாக இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் சிவப்பிரியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் முடிந்துவிட்டாலும், மற்ற மாநிலங்களில் தேர்தல் நிலுவையில் உள்ளதால், வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி மாலைக்குப் பிறகே எக்ஸிட் போல் எனப்படும் தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாக உள்ளன.
இந்தத் தரவுகள் அரசியல் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு குறித்த ஒரு மேலோட்டமான திசையை ஓரளவிற்கு உணர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது எக்ஸிட் போல் முடிவுகள் பல இடங்களில் தவறாக அமைந்ததைச் சுட்டிக்காட்டும் அரசியல் கட்சிகள், இந்தக் கணிப்புகள் மீது முழு நம்பிக்கை கொள்ளவில்லை.
தங்களுக்குச் சாதகமாக முடிவுகள் வராவிட்டால், எக்ஸிட் போல் கணிப்புகளைக் கடுமையாக விமர்சிக்கவும், அவற்றை நிராகரிக்கவும் இப்போதே பல கட்சிகள் தயாராகி வருகின்றன. வரும் மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, இந்த எக்ஸிட் போல் விவாதங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
