இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா, தனது 39-வது பிறந்தநாளை வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி கொண்டாட உள்ளார். இந்த நிலையில், ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது தனது சக வீரர் ஷர்துல் தாக்கூரை அவர் வேடிக்கையாக கிண்டல் செய்து இமிட்டேட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் காயத்தினால் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆடும் லெவனில் இடம்பெறாத ரோகித், பயிற்சியின் போது சக வீரர்களுடன் கலகலப்பாக நேரத்தை செலவிடுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வைரல் வீடியோவில், ஷர்துல் தாக்கூர் தீவிரமாக எடையைத் தூக்கி பயிற்சி செய்து கொண்டிருக்க, அவருக்குப் பின்னால் வரும் ரோகித் சர்மா, அதே பாணியில் கைகளை அசைத்து எடையைத் தூக்குவது போல நடித்து அவரை கிண்டல் செய்கிறார்.

“>

இதனால் ரோகித்தின் இந்த நகைச்சுவையான செயல் இணையதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் விரைவில் காயத்திலிருந்து மீண்டு மைதானத்திற்குத் திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் வேளையில், அவரது பிறந்தநாளுக்கு முன்னதாக வெளியாகியுள்ள இந்த கலகலப்பான வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.