விஜய்யின் வருகை இந்தத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என ஒரு தரப்பு ஆணித்தரமாக நம்பினாலும், கள எதார்த்தம் வேறாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளனர். குறிப்பாக, சென்னை போன்ற முக்கிய பெருநகரங்களில் கடந்த தேர்தலை விட சுமார் 4,500 வாக்குகள் வரை குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலித் மற்றும் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கூட வாக்கு சதவீதம் பெரிய அளவில் உயரவில்லை என்பது விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் விஜய் ஒரு ‘எக்ஸ்-ஃபேக்டராக’ கொண்டாடப்பட்டாலும், அந்தப் பிம்பம் நிஜமான வாக்குகளாக மாறியிருக்கிறதா என்பதில் பெரும் சந்தேகம் நிலவுகிறது. வெறும் ‘ரீல்ஸ்’ மற்றும் இன்ஸ்டாகிராம் டிரெண்டிங் மட்டும் தேர்தலை வென்றுவிடாது எனச் சுட்டிக்காட்டும் விமர்சகர்கள், இந்த இழுபறி நீடித்தால் அது விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கே சவாலாக அமையும் என எச்சரிக்கின்றனர். மக்கள் ஆதரவு என்பது வாக்குகளாக அறுவடை செய்யப்பட்டதா அல்லது வெறும் ஆரவாரம் தானா என்பது முடிவுகள் வரும்போதுதான் தெரியும்.
