ஸ்பெயினின் செவில் நகரில் நடைபெற்ற திருவிழாவில், ‘ஸ்டீல் மேக்ஸ்’ என்ற ராட்டினம் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. ஏப்ரல் 24 அன்று மாலை, இரண்டு பேர் அமர்ந்திருந்த அந்த ராட்டினத்தின் கம்பி நடுவானில் திடீரென அறுந்து விழுந்தது.
சுமார் 300 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில், ராட்டினத்தில் இருந்த இரண்டு குழந்தைகள் மற்றும் கீழே நின்று கொண்டிருந்த இருவர் என மொத்தம் நான்கு பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளித்தனர்.
காயமடைந்த நான்கு பேரும் லேசான காயங்களுடன் தப்பினர், அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஸ்பெயின் தேசிய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பகுதியை தீயணைப்புத் துறையினர் தற்போது மூடி வைத்துள்ளனர்.
Cable snaps mid-air on 90m slingshot ride in Spain, 4 injured
The 2 riders, both children, were later taken to a medical centre. pic.twitter.com/B5yzHGQ3mk
— MustShareNews (@MustShareNews) April 27, 2026
“>
உள்ளூர் மக்களுக்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த செவில் திருவிழாவில் நடந்த இந்த விபத்து அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
