காதல் என்ற பெயரில் அரங்கேறியுள்ள ஒரு மிருகத்தனமான சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டேட்டம் என்ற பெண்ணும், ஸ்டீவன் போர்ட் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு நாள் இரவு, காதலி டேட்டமிற்கு உணவில் போதைப்பொருள் கலந்து கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார் ஸ்டீவன்.
அவர் மயக்கத்தில் இருந்தபோது, சவரக்கத்தியால் டேட்டமின் தொடையில் இருந்து சுமார் 6 அங்குல நீளமுள்ள சதைப்பகுதியை அறுத்து எடுத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் டேட்டம் கண்விழித்துப் பார்த்தபோது, அருகில் அமர்ந்திருந்த காதலன் ஸ்டீவன், தனது தொடையில் இருந்து எடுத்த சதைத்துண்டை ரசித்து மென்று தின்று கொண்டிருந்ததைக் கண்டு உறைந்து போயுள்ளார்.
இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட ஸ்டீவனுக்கு தற்போது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தண்டனை முடிந்து அவர் வெளியே வந்தால் மீண்டும் தன்னைத் தேடி வந்து இது போன்ற கொடுமைகளைச் செய்வாரோ என்ற மரண பயத்திலேயே அந்தப் பெண் வாழ்ந்து வருகிறார்.
