கோடை வெயில் சுட்டெரிக்கும் வேளையில், இந்திய இளைஞர் ஒருவரின் வித்தியாசமான யோசனை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விலை உயர்ந்த ஏசி வாங்க வசதி இல்லாத சூழலில், மின்விசிறி மற்றும் ஈரத் துணியைப் பயன்படுத்தி மிக எளிமையான முறையில் அவர் குளிர் காற்றை உருவாக்கியுள்ளார். ஒரு தண்ணீர் பாட்டிலில் இருந்து சொட்டு சொட்டாகத் தண்ணீர் ஒரு துணியின் மீது விழுமாறு அமைத்து, அந்தத் துணியை மின்விசிறிக்கு முன்னால் தொங்கவிட்டுள்ளார்.
<a href="http://

“>

மின்விசிறி ஓடும்போது அந்த ஈரத் துணியின் வழியாக வரும் காற்று, அறையைக் குளிர்ச்சியாக வைத்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.இந்த எளிய மற்றும் செலவில்லாத முறையைப் பாராட்டி இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். “இந்தியர்களின் புத்திசாலித்தனத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை” என்றும், “இத்தகைய கண்டுபிடிப்பாளர்கள் அறிவியல் நிறுவனங்களில் இருக்க வேண்டும்” என்றும் பயனர்கள் பதிவிட்டுள்ளனர்.

அதே சமயம், இது ஒரு தற்காலிகமான தீர்வு மட்டுமே என்றும், நீண்ட காலத்திற்கு பாதுகாப்பான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதே சிறந்தது என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். எது எப்படியோ, வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இந்த இளைஞர் காட்டியுள்ள ஆக்கப்பூர்வமான வழிமுறை தற்போது இணையத்தில்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.