ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்னதாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்டர் அபிஷேக் சர்மா ஜெய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கோவிந்த் தேவ் ஜி கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். தனது குடும்பத்தினருடன் அவர் சாமி கும்பிடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அங்கு ஒரு சுவாரசியமான வதந்தியும் தீயாய் பரவி வருகிறது. அதாவது, சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது அபிஷேக் சர்மாவின் காலணிகள் காணாமல் போய்விட்டதாகச் சொல்லப்படுகிறது.
இது குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், நெட்டிசன்கள் இதை மிகவும் ஜாலியாகக் கையாண்டு வருகின்றனர். “செருப்பு போனால் அதிர்ஷ்டம் வரும்” என்றும், “சாமி ஆசிர்வாதம் முழுமையாகக் கிடைத்துவிட்டது” என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்தப் போட்டிக்கு முன்னதாக அவர் எடுத்த இந்த ஆன்மீக முயற்சி, அவருக்கு மட்டுமல்லாது அணியின் வெற்றிக்கும் கைகொடுத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 380 ரன்களுடன் ஆரஞ்சு கேப்பைத் தக்கவைத்துள்ள அபிஷேக் சர்மாவின் இந்த கோவில் விசிட், கிரிக்கெட் வட்டாரத்தில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.
