காரைக்காலில் மனிதர்களைப் போலவே காகம் ஒன்று பிஸ்கட்டைத் தண்ணீரில் நனைத்துச் சாப்பிடும் ஆச்சரியமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுட்டெரிக்கும் கோடை வெயிலால் மனிதர்கள் மட்டுமன்றி பறவைகளும் விலங்குகளும் தவித்து வரும் நிலையில், காரைக்கால் பகுதியில் உள்ள காகம் ஒன்று தனக்குக் கிடைத்த உலர்ந்த பிஸ்கட்டை அப்படியே சாப்பிடாமல், அருகிலிருந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் நனைத்து மென்மையாக்கி உண்பது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
காரைக்காலில் மனிதர்களை போல பிஸ்கட்டை தண்ணீரில் நனைத்து உண்ணும் காக்கா.. வைரலாகும் வீடியோ #Karaikal #Crow #Birds #Water #Summer #Newstamil24x7 pic.twitter.com/GAYXZqvk54
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) April 26, 2026
“>
காகங்கள் புத்திசாலியான பறவைகள் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ள இந்த வீடியோ, “தாகம் தீர்த்த காகம்” கதையைத் தாண்டி, அதன் நவீன காலப் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். . கோடை காலத்தின் தாக்கத்தையும் மீறி, இயற்கையின் இந்தச் சிறு சுவாரஸ்யம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
