தாய்லாந்து நாட்டின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் தளங்களைத் தாண்டி, அந்நாட்டு மக்களின் கனிவான சுபாவமே அதன் உண்மையான ‘சாஃப்ட் பவர்’ என்பதை ஒரு நெளிழ்ச்சியான வீடியோ நிரூபித்துள்ளது. தாய்லாந்தில் உள்ள ஒரு பொதுப் பேருந்தில் பயணம் செய்த வெளிநாட்டுச் சிறுவன் ஒருவன், பேருந்தின் குளிர்சாதன வசதி  பழுதானதால் வெப்பம் தாங்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.

இதைக் கவனித்த அந்தப் பேருந்தின் நடத்துனர், சற்றும் யோசிக்காமல் தனது கையில் இருந்த விசிறியை எடுத்து அந்தச் சிறுவனுக்கு விசிறி விட்டுள்ளார். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, ஒரு அந்நிய நாட்டுச் சிறுவனுக்கு அவர் செய்த இந்தச் சிறு உதவி, அங்கிருந்தவர்களைப் பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “தாய்லாந்து மக்கள் பெரும்பாலும் இரக்க குணமும், தாராள மனப்பான்மையும் கொண்டவர்கள் என்பதற்கு இதுவே சாட்சி” என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். வசதிகள் குறையும் இடத்தில்தான் மனிதநேயம் வளர்கிறது என்பதை இந்தச் சம்பவம் உலகிற்கு உணர்த்தியுள்ளது.