சமூக ஊடகங்களில் லைக்குகளுக்காகவும், புகழுக்காகவும் இளைஞர்கள் செய்யும் ஆபத்தான செயல்கள் சில நேரங்களில் விபரீதத்தில் முடிகின்றன. சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இளைஞர் ஒருவரும் இளம்பெண்ணும் நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் சாகசத்தில் ஈடுபடுகின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக பைக்கின் கட்டுப்பாடு இழந்ததால், இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு பல அடி தூரம் சறுக்கிச் சென்றனர்.
இந்த கோர விபத்து காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இந்த விபத்தின் போது அவர்களைப் பின்தொடர்ந்து வீடியோ எடுத்துக் கொண்டு வந்த நண்பர்களும் நிலைதடுமாறி ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டனர். இதனால் அந்த நெடுஞ்சாலையே போர்க்களம் போல காட்சியளித்தது. ஒரு சிறிய கவனக்குறைவு மற்றும் தேவையற்ற சாகசம் பலரது உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
<a href="http://
बन गई रील लगता है ये आखिरी रील साबित हो गई इनकी….
रील बनाने के चक्कर में लोग अपनी जान तक जोखिम में डाल देते है….👇 pic.twitter.com/5VSkjT2z4H
— Pushpraj sharma (@ThePushprajX) April 22, 2026
“>
சமூக வலைதளப் புகழுக்காகத் தங்கள் உயிரையும், மற்றவர்களின் பாதுகாப்பையும் பணயம் வைக்கும் இத்தகைய செயல்களைத் தவிர்க்க வேண்டும் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
