டெல்லி மெட்ரோ ரயிலில் நபர் ஒருவர் ‘தேரி தீவானி’ என்ற புகழ்பெற்ற பாடலுக்கு ஆடிய விசித்திரமான நடன வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பொதுவாக மெட்ரோ ரயில்களில் சண்டைகள் அல்லது தள்ளுமுள்ளு வீடியோக்கள் தான் வைரலாகும், ஆனால் இந்த வீடியோவில் அந்த நபர் ஆடிய ஆட்டம் பயணிகளைப் பயத்தில் உறைய வைத்துள்ளது.
<a href="http://
“>
ரயிலின் கம்பியைப் பிடித்துக்கொண்டு அவர் வெறித்தனமாகத் துள்ளிக் குதித்து ஆடியதைப் பார்த்த அருகில் இருந்த பயணிகள், எங்கே தங்களுக்குக் காயம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தங்களது இருக்கைகளை விட்டு எழுந்து ஓடினர். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 87 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அந்த நபரின் விசித்திரமான நடன அசைவுகளைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் கிண்டலான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
“அவருக்கு வந்த தன்னம்பிக்கை மட்டும் எனக்கு வந்துவிடவே கூடாது” என்றும், “யாராவது அவரைத் தடுத்து நிறுத்துங்கள்” என்றும் சமூக வலைதளங்களில் கமெண்டுகள் குவிந்து வருகின்றன. சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை ஏதுமின்றி அவர் ஆடிய இந்த ‘வெறித்தனமான’ நடனம் டெல்லி மெட்ரோவில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
