தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அரசியல் கலந்த அறிக்கை இப்போது சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது.
தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய பின் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகள் நம்மை ஆளப்போகிறவர்களைச் சரியாகத் தேர்வு செய்ய வேண்டியது நம் கையில் தான் உள்ளது” என்று வலியுறுத்தினார்.
மேலும், நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வருகிறார்கள் என்ற நீண்டகாலக் கேள்விக்கு அதிரடியாகப் பதிலளித்த அவர், “தற்போதுள்ள அரசியல்வாதிகள் தங்களது பணிகளைச் சரியாகச் செய்யாததால்தான் நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
வரும் காலத்தில் அரசியலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும்” என்று தனது அரசியல் என்ட்ரியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தொடங்கித் தீவிரமாகப் பணியாற்றி வரும் நிலையில், விஷாலின் இந்த அதிரடிப் பேச்சு கோலிவுட் முதல் கோட்டை வரை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
