பிரபல பழமைவாத எழுத்தாளர் மைக்கேல் சாவேஜ் என்பவரது கருத்தைப் பகிர்ந்துள்ள ட்ரம்ப், அமெரிக்காவில் அமலில் இருக்கும் ‘பிறப்புரிமை குடியுரிமை’ (Birthright Citizenship) சட்டத்தை ஒரு பெரிய மோசடி எனக் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியா அல்லது சீனா போன்ற ஏதோ ஒரு நரகக் குழியில் இருந்து ஒன்பதாவது மாதத்தில் அமெரிக்கா வந்து குழந்தையைப் பெற்று, அதன் மூலம் அந்தக் குழந்தைக்கும், பின் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றுத் தருகிறார்கள்; இது அமெரிக்காவை ஒரு காட்டுமிராண்டி நாடாக மாற்றிவிடும்” என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கலிபோர்னியாவின் உயர்தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை இந்தியர்களும் சீனர்களும் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனால் வெள்ளையர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்றும் அந்தப் பதிவு சாடியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “நாங்கள் சில செய்திகளைப் பார்த்துள்ளோம், இப்போதைக்குச் சொல்ல ஒன்றுமில்லை” என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் மிகவும் சுருக்கமாகப் பதிலளித்துள்ளார்.

அமெரிக்கத் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்தியர்களுக்கு எதிராக ட்ரம்ப் எடுத்துள்ள இந்த அதிரடி நிலைப்பாடு இந்திய – அமெரிக்க உறவில் விரிசலை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.