சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,13,280 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15447 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,23,576 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 270 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,70,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.