ஹரியானா மாநிலம் சிர்சாவில் இன்று காலை 6:28 மணியளவில் நடந்த திருமண விடைபெறுதல் (Vidai) விழா, ரத்தக் களறியாக மாறியது. மணமகள் விடைபெறும் உருக்கமான காட்சியைச் சாலையோரம் நின்று படம்பிடித்துக் கொண்டிருந்த கேமராமேன் மீது, கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார் அசுர வேகத்தில் மோதியது. இந்த பயங்கர மோதலில் அந்த இளைஞர் சுமார் 25 அடி உயரத்திற்கு அந்தரத்தில் பந்து போலத் தூக்கி வீசப்பட்ட காட்சி பார்ப்பவர் நெஞ்சை உறைய வைக்கிறது.
Съемка конечно получилась феерическая 🤦♀️🫣🤕 pic.twitter.com/2QF0OEzZzL
— ⭐️Oles Filonenko⭐️ (@FilonenkoOles) April 22, 2026
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில், அங்கிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்படப் பல விருந்தினர்கள் காயமடைந்தனர். ஒரு நொடிக்கு முன் வரை கொண்டாட்டத்தில் இருந்த அந்த இடம், அடுத்த நொடியே அலறல் சத்தத்தால் போர்க்களம் போல மாறியது. அதிவேகமே இந்தத் துயரத்திற்குப் பிரதானக் காரணமாக அமைந்துள்ள நிலையில், இந்த அதிர்ச்சி வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
