நமது முன்னோர்கள் “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்று சும்மாவா சொன்னார்கள்? அதை மெய்ப்பிக்கும் வகையிலான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. மனிதர்களுக்கு வாயில்லாப் பிராணிகளைத் துன்புறுத்துவதில் ஒருவித அற்ப சந்தோஷம் இருக்கும்.
அப்படி ஒரு வாலிபர் தெருவோரம் இருந்த நாய் ஒன்றை கையில் தூக்கி, அதை அந்தரத்தில் பறக்கவிடுவது போல வேகமாகச் சுழற்றத் தொடங்கினார். அந்த வாயில்லா ஜீவன் பயத்தில் அலறித் துடித்தும், அந்த வாலிபர் விடுவதாக இல்லை. ஆனால், அடுத்த சில நொடிகளில் நடந்த ட்விஸ்ட் தான் அந்த வீடியோவின் ஹைலைட்.
Instant-Karma Kalesh (BOY SPINS STRAY DOG, ENDS UP FALLING INTO DRAIN HIMSELF) pic.twitter.com/uHk9TdDDCg
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 20, 2026
வேகமாகச் சுழற்றிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அந்த வாலிபரின் பிடி நழுவ, அந்த நாய் தப்பித்து ஓடியது. அதே வேகத்தில் நிலைதடுமாறிய அந்த வாலிபர், அருகிலிருந்த கழிவுநீர் சாக்கடைக்குள் தலைகுப்புற விழுந்தார். @gharkekalesh என்ற எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள், “மற்றவர்களுக்குத் துன்பம் கொடுத்தால் நமக்கும் அது உடனே திரும்ப வரும் என்பதற்கு இதுவே சாட்சி” என கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிராணிகளை வதைப்பவர்களுக்கு இது ஒரு தகுந்த பாடம் என பலரும் கருத்து தெரிவித்து வருவதால் இந்த வீடியோ இணையத்தில் 100% ரீச் பெற்று வைரலாகி வருகிறது.
