பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் போலிப் படங்களை விளம்பரத்திற்காகப் பயன்படுத்தி பாகிஸ்தானிய ஆடை நிறுவனம் ஒன்று பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ‘வஜயேஷா அபிஷியல்’ என்ற அந்த நிறுவனம், ஆலியா பட் தங்கள் பிராண்ட் உடைகளை அணிந்திருப்பது போன்ற ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது.
மேலும், ஆலியா பட் தங்கள் உடைகளை விரும்பி அணிந்ததாகப் பொய் கூறி விளம்பரம் செய்த அந்த நிறுவனம், வாடிக்கையாளர்களை ஆர்டர் செய்யவும் தூண்டியது. இந்த மோசடியைக் கண்டுபிடித்த ஆலியா பட்டின் ரசிகர்கள், அந்தப் புகைப்படங்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை என்பதை ஆதாரங்களுடன் சமூக வலைதளங்களில் அம்பலப்படுத்தினர்.
<a href=”http://
A woman in the Philippines was left stunned when a giant whale shark quietly swam up behind her and nudged her arm during an underwater photo shoot. pic.twitter.com/RyjNg1tXH0
— wR (@WeReporter) April 20, 2026
“>
அனுமதியின்றி நடிகையின் முகத்தைப் பயன்படுத்தியதற்காக அந்த நிறுவனத்தைக் கடுமையாக விமர்சித்து வரும் ரசிகர்கள், ஆலியா பட் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், இந்த விமர்சனங்களுக்குப் பயப்படாமல், இந்தப் பதிவை இன்னும் வைரலாக்கி ஆலியா பட்டிடமே கொண்டு செல்லுங்கள் என அந்த நிறுவனம் நக்கலாகப் பதிலளித்துள்ளது நெட்டிசன்களிடையேமேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது
