லண்டனில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி இந்தியர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. @veggiewander என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒரு பெண் 100 ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு லண்டன் தெருக்களில் என்னவெல்லாம் வாங்க முடியும் என்று சோதித்துப் பார்க்கிறார்.
முதலில் ஒரு சாண்ட்விச் மற்றும் தண்ணீர் பாட்டில் வாங்க முயன்ற அவருக்குப் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில், ஒரு தண்ணீர் பாட்டிலின் விலையே 143 ரூபாயாக இருந்தது. 100 ரூபாய்க்கு ஒரு முட்டைக்கோஸ் கூட வாங்க முடியாத நிலையில், நீண்ட தேடலுக்குப் பிறகு வெறும் இரண்டு கேரட்டுகளை மட்டுமே அவரால் வாங்க முடிந்தது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலவிதமான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். “100 ரூபாய்க்கு இவ்வளவு தான் மதிப்பா? லண்டனை விட்டுவிட்டு இந்தியாவுக்கே வந்துவிடுங்கள், இங்கே 100 ரூபாய்க்கு நிறைய காய்கறிகள் வாங்கலாம்” என்று சிலர் பதிவிட்டுள்ளனர்.
View this post on Instagram
“>
அதே சமயம், விலையை மட்டும் ஒப்பிடாமல் அங்குள்ள மக்களின் சம்பளத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை நிலை புரியும் எனச் சிலர் அறிவுறுத்தியுள்ளனர். எது எப்படியோ, இந்திய மதிப்புப்படி ஒரு தண்ணீர் பாட்டிலின் விலை 143 ரூபாய் என்பது பலரையும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
