எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு காணொளி தற்போது இணையவாசிகளிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காணொளியில், கண்பார்வையற்ற நபர் ஒருவர் காலக்கணிப்பானை (Timer) சரியாக 10 விநாடிகளில் நிறுத்த முயற்சி செய்கிறார். கண்ணால் பார்க்க முடியாத சூழலில் அவர் இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற ஆர்வத்துடன் அனைவரும் காத்திருக்கின்றனர்.
This blind dude nails the 10-second challenge and earns himself a free haircut pic.twitter.com/tyQTvLjG2D
— Dudes Posting Their W’s (@DudespostingWs) April 21, 2026
எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், அந்த நபர் கடிகார முட்கள் நகர்வதை உணர்ந்து, துல்லியமாக 10 விநாடிகள் வரும்போது டைமரை நிறுத்தி அனைவரையும் அதிரவைக்கிறார். ஒரு நொடி கூட பிசகாமல் அவர் காட்டிய இந்தத் திறமை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தக் காணொளிக்குக் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
