உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், மனிதநேயமே இல்லாத ஒரு கோரச் சம்பவம் நடந்துள்ளது. ராஜா மற்றும் ஃபாரா என்ற தம்பதி, தங்களது அண்டை வீட்டைச் சேர்ந்த ஃபஹீம் என்பவரிடம் ஒரு வீட்டை விலைக்கு வாங்கியுள்ளனர். அந்த வீட்டின் விலையில் பெரும்பகுதியைச் செலுத்திவிட்ட நிலையில், இன்னும் 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே மீதம் இருந்துள்ளது.
ஆனால், வீட்டைப் பத்திரப்பதிவு செய்யும்போது ஃபஹீம் திடீரென கூடுதலாகப் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இந்த 40 ஆயிரம் ரூபாய் கொடுக்கல் வாங்கல் தகராறு தான் ஒரு குடும்பத்தையே பலிவாங்கியுள்ளது. சம்பவத்தன்று இரவு, ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற ஃபஹீம், ராஜா மற்றும் அவரது மனைவி ஃபாரா ஆகிய இருவரையும் சரமாரியாகத் தாக்கிக் கத்தியால் கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளார்.
இந்த ரத்த வெறி ஆட்டம் நடந்தபோது, அந்த தம்பதியின் மூன்று சிறு குழந்தைகளும் அதே அறையில் இருந்துள்ளனர். தங்களது கண் முன்னே பெற்றோர் துடிதுடிக்கக் கொல்லப்படுவதைப் பார்த்து அந்தக் குழந்தைகள் கதறி அழுத சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த தம்பதி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் கொலையாளி ஃபஹீமை கைது செய்துள்ளனர்.
வெறும் பணத்திற்காக மூன்று குழந்தைகளை அனாதையாக்கிய இந்தச் சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
