எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒரே சுயநல நோக்கத்திற்காக, தமிழகத்தின் நலனை பாஜகவிடம் அடமானம் வைத்துத் தேர்தலைச் சந்திப்பதாக சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக – பாஜக இடையிலான ரகசியக் கூட்டணி மாநிலத்தின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக இருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

​தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்தத் தேர்தல் மிக முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் சிறந்த கூட்டணி திமுகவா அல்லது அதிமுகவா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழக நலனை அடமானம் வைத்தவர்களுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.