தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் பாஜக இடையே ரகசியக் கூட்டணி இருப்பதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்வைத்துள்ள பகீர் குற்றச்சாட்டு அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இன்று சென்னையில் நடைபெற்ற தனது பிரம்மாண்டமான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் பேசிய விஜய், “திரைக்கு முன்னால் மோதிக்கொள்வது போல நடிக்கும் திமுகவும், பாஜகவும் திரைக்குப் பின்னால் கள்ளக் கூட்டணி வைத்துள்ளன; இது தற்போது மக்களுக்குத் தெளிவாக அம்பலமாகிவிட்டது” என ஆக்ரோஷமாகப் பேசினார்.
மேலும், கடந்த காலங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்ட இந்த ‘ரகசிய டீலிங்’ இனி செல்லுபடியாகாது என்றும், வருகிற தேர்தலில் திமுகவின் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் கர்ஜித்தார். பாசிச எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டே ரகசிய உடன்படிக்கை வைத்திருக்கும் கட்சிகளுக்கு மக்கள் ‘விசில்’ சின்னம் மூலம் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என விஜய் பேசியது, திமுக மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவுக்கும் பாஜகவுக்கும் இருக்கக்கூடிய கள்ளக் கூட்டணி அம்பலம் ஆயிடுச்சு திமுக தோற்பது உறுதி – @TVKVijayHQ 🔥🔥 pic.twitter.com/ZHsVYUCT7D
— priya (@PriyankaSmile01) April 21, 2026
“>
