தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரம் இன்றுடன் ஓயும் நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் வெளியிட்ட தேர்தல் கணிப்புகளை தவெக தலைவர் விஜய் தனது அதிரடிப் பிரச்சாரத்தின் மூலம் தவிடுபொடியாக்கியுள்ளார்.
“விஜய்க்குப் போதுமான வாக்கு வங்கி இல்லை, அவர் வெறும் வாக்குகளைப் பிரிப்பார்” என்று ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருசேர முன்வைத்த கணிப்புகளை உடைத்து எறிந்த அவர், இன்று சென்னையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ நடத்திய ரோடு ஷோ மூலம் தனது பலத்தை நிரூபித்துள்ளார்.
“எதிர்பார்த்ததை விடக் கூடுதல் எழுச்சியுடன் தவெக களமிறங்கியுள்ளதைப் பார்த்து இப்போது பழைய கட்சிகளுக்கு ‘டர்ர்’ ஆகிறது” எனத் தனது பாணியில் பதிலடி கொடுத்த விஜய்யின் பேச்சு, சமூக வலைதளங்களில் ‘ட்ரெண்டிங்’ ஆகி வருகிறது. திராவிடக் கோட்டைகளை அசைத்துப் பார்க்கும் வகையில் ‘விசில்’ சத்தம் தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளதால், தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய அதிர்ச்சியைத் தரும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திமுகவும் அதிமுகவும் சேர்ந்து கடுப்புல விட்ட கணிப்பை ஒடச்சி எறிஞ்சுட்டாரு..
டர்ர்.. ஆகுதாடா pic.twitter.com/PpIsLNr6Oc— RamKumarr (@ramk8060) April 21, 2026
“>
