தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில், கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடந்த துயரமான நெரிசல் சம்பவம் குறித்து ஆளுங்கட்சியினர் முன்வைத்த விமர்சனங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

“கரூரில் என்ன நடந்தது என்று அங்கிருக்கும் மக்களிடம் கேட்டால் எல்லா உண்மையும் சொல்வார்கள்; நான் தாமதமாக வந்தேன் என்று என் மீது பழி போடுகிறீர்கள், ஆனால் நான் சரியான நேரத்திற்குத்தான் வந்தேன்” என்று அவர் விளக்கமளித்தார்.

மேலும், நாமக்கல்லில் இருந்து கரூர் வரை திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்களைப் பார்க்காமல் பாதியிலேயே விட்டுவிட்டு வரச் சொல்கிறீர்களா? என கேள்வி எழுப்பிய அவர், அந்த நிகழ்வுகள் அனைத்தும் உலகம் முழுவதும் நேரலையில் (Live) ஒளிபரப்பானதைச் சுட்டிக்காட்டினார். “மக்களைக் கைவிட்டுவிட்டு என்னால் வர முடியாது” என உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய விஜய்யின் இந்த விளக்கம், , சமூக வலைதளங்களிலும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

“>