சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் சாட்டை துரைமுருகன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை வழக்கம் போலத் தனது பாணியில் கிண்டல் செய்து பேசியுள்ளார்.

விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது அறிக்கைகளைத் தொடர்ச்சியாக விமர்சித்து வரும் துரைமுருகன், காரைக்குடி மேடையில் திடீரென விஜய்யின் தவெக  பிரச்சார  பாடல் மெட்டில்  நக்கலாக பாடலைப் பாடி அவரைக் கலாய்த்தார்.

“திரையில் பாடிய பாடல்களுக்கும், நிஜ அரசியல் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை; ரீமேக் அரசியலை மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்று அவர் நக்கலாகப் பேசியபோது கூடியிருந்த தொண்டர்களிடையே பலத்த சிரிப்பொலி எழுந்தது. ஏற்கனவே சீமான் – விஜய் இடையே அரசியல் மோதல் முற்றியுள்ள நிலையில், சாட்டை துரைமுருகனின் இந்தப் பாட்டுப் பாடி கலாய்த்த வீடியோ தற்போது தவெக மற்றும் நாதக தொண்டர்களிடையே சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

“>