தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னையில் தீவிர ரோடுஷோவில் ஈடுபட்டார். வில்லிவாக்கம், அண்ணா நகர் பகுதிகளில் பிரசாரம் செய்துவிட்டு விருகம்பாக்கம் தொகுதியில் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தபோது, ஒரு எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. பிரசார வாகனத்தின் மேற்கூரையில் நின்று தொண்டர்களை நோக்கி கையசைத்துக் கொண்டிருந்த விஜய், பின்னர் வாகனத்திற்குள் இறங்க முயன்றபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

​அவர் வாகனத்திற்குள் சரிந்து விழுந்ததைக் கண்டு அருகில் இருந்த பவுன்சர்கள் மற்றும் தொண்டர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போயினர். உடனடியாக பவுன்சர்கள் அவரைத் தாங்கிப் பிடித்தனர். இந்தச் சம்பவத்தில் அவருக்குப் பலத்த காயம் எதுவும் ஏற்படவில்லை எனத் முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், விஜய் தடுமாறி விழுந்த அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதால், அவரது உடல்நிலை குறித்துத் தொண்டர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். நாளை மாலையுடன் பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில், இந்தச் சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.